Advertise Here

Breaking News

ஆறு மாதம் to ஆறு நாட்கள்


குறைந்த விலையில் வீடு, வெறும் 14.99 lacs மட்டுமே. ரீலீஸ்டேட் விளம்பரங்களில் பெரும்பாலும் கேட்டிருப்போம். குறைந்த விலையில் வீடு கட்டுவது சாத்தியமா? இருந்தால் அதன் தரம் எப்படி இருக்கும், எவ்வாறு சாத்தியமாகும்? என்று பல கேள்விகள் உண்டு. குறைந்த விலையில் தரமான வீடு கட்டுவது இந்த நவீன காலத்தில் மிகவும் சுலபமான ஒன்று. வியாபார அரசியலின் ஆதிக்கத்தால் புதிய, நேர்த்தியான தொழில்நுட்பங்கள் நம் பயன்பாட்டிற்கு வராமலும் அல்லது தரமற்ற பொருள் என்ற முத்திரையோடு சென்றுவிடுகிறது.

மண்சுவர் எழுப்பி, தரைக்கு சாணம் மொழுகி, கூரை நெய்து கட்டிய வீடுகள் யாவும் நாகரீக வளர்ச்சியின் பெயரில் சுய லாபத்திற்காக விற்கப்பட்ட பொருட்கள் மட்டுமே சிறந்தது என்ற நோக்கில் நாம் சிந்தனை உள்ளது. மாற்று பொருட்கள் மட்டும் அல்ல கட்டுமான முறையில் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்களும் குறைந்த  விலையில் வீடு கட்ட உதவும்.

ICF (Insulating Concrete Form) மற்றும் Foam Concrete House முறையில் கட்டுமான செலவுடன் சேர்த்து நாம் அன்றாடம் வாழ செலவு செய்யும் மின்சார செலவுகளையும் குறைக்க முடியும். இந்த முறையில் நம் கட்டுமானத்திற்கு ஒன்றிலிருந்து ஆறு நாட்கள் மட்டுமே தேவைப்படும். இதன் மூலம் 60% வேலையாட்களின் கூலி சேமிக்க இயலும். ICF blocks, steel bars, Concrete மட்டுமே இதில் பயன்படுத்த போகும் கட்டுமான பொருட்கள். நம் விருப்பத்திற்கு ஏற்ப சுவர்களை ICF blocks கொண்டு வடிவமைத்த பின் அதில் சில steel bars பொறுத்த வேண்டும், பின் இதில் RMC Ready Mix concrete வைத்து நிரப்ப வேண்டும். இந்த முறையில் வெளி பூச்சு தேவை கிடையாது. பட்டி பார்த்து நேரடியாக வண்ணம் பூசினால் போதுமானது. மேலும் இதில் செய்யப்படும் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைப்பாடுகளும் சுலபமாக முடித்துவிடலாம்.

Foam Concrete House சாதாரண முறையில் Basement வேலைகள் முடிந்தவுடன் நாம் roofing காக பயன்படுத்தும் shuttering பொருட்கள் கொண்டு மொத்த கட்டிடமும் formwork செய்யப்படும். பின் அதில் Foam concrete நிரப்பப்பட்டு சுவர்கள் கட்டப்படும். வீட்டின் கூரை தனியாக mould செய்யப்பட்டு பொருத்தப்படும். இதில் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைகள் அனைத்தும் formwork முடிந்தவுடனே தேவைக்கு ஏற்ப concealed முறையில் பொருத்தப்படும். குறைந்தது ஆறு நாட்களில் வீடு முழுமைபெறும்.
,

1 comment:

  1. Discover the best drone survey services in India. Our expert team offers accurate aerial data collection for diverse applications, including land surveying, infrastructure inspection, and agriculture. With cutting-edge technology, we ensure data precision and provide actionable insights. Compliant with local regulations, our operators prioritize safety and efficiency. Experience cost-effective and time-saving drone surveys to elevate your projects. Contact us today to discuss your specific needs and benefit from our top-tier drone survey solutions in India.

    ReplyDelete