Advertise Here

Breaking News

வரவேற்பறையை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் வடிவமைக்க

பலருக்கும் சொந்த வீடு என்பது கனவாகவே உள்ளது. அதிலும் வேலைக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போருக்கு தான் வாழும் ஊரில் சொந்தமாக தனது ரசனைக்கு ஏற்ப அனைத்து வசதிகளுடனான வீடு என்பது எட்டா கனியாகவே உள்ளது.
தனி மனைகளின் விலை உயர்வு, நேர்முறையில் கட்டிட ஒப்புதல் (Approval) பெறுவது, நமக்கு தேவையான வசதிகளுடன் பட்ஜெட்டிற்கு ஏற்ப கட்டித்தரக்கூடிய காண்ட்ராக்டர் தேடுவது தொடங்கி நண்பர்களின் அறிவுரை, வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பு, கட்டுமான பணியில் நடக்கும் குளறுபடிகள், மணல் பற்றாக்குறை, பயன்படுத்தும் பொருட்கள் யாவும் தரமானவையா என்று ஆயிரம் சவால்கள் வந்து நிற்கும்.
தனி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசைக்கு பின்னாடி இத்தனை காரியங்களிலும் நம் பங்களிப்பு என்பது 100% இருக்க வேண்டும். வளர்ந்துவரும் பெருநகரங்களில் தனி வீடு கட்டுவதில் இருக்கும் சவால்களுக்கு விடுமுறை கொடுத்தது அடுக்குமாடி குடியிருப்பு வசதி.
நம் வசதிக்கு ஏற்ப சொந்த வீடு அனைத்து வசதிகளுடனும் விருப்பிய வடிவில் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லமுடியுமா ?
நாம் தேர்வு செய்யும் கட்டுமான நிறுவணங்களில் பெரும்பாலும் கட்டிட ஒப்புதல், வங்கி கடன், கட்டுமானம் ஆகிய அனைத்து வசதிகளையும் தாங்களே செய்து தருகின்றனர். ஒரு வழியாக வீடும் கட்டி குடிபோன பிறகு ஏற்படும் மிக பெரிய குழப்பம் எந்த அறையை எப்படி வடிவமைப்பது என்பது தான்.
வரவேற்பறையை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் வடிவமைக்க குறிப்புக்கள்.
தங்கள் வீடு அழகாக அமைய முதலில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் வண்ணம் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உதாரணத்திற்கு வெளிர் நிறங்களை பயன்படுத்தினால் அறையின் அளவு சற்று பெரிதாக தெறியும் , அடர் வண்ணங்களை பயன்டுத்தும் போது அறையின் அளவு சற்று குறைவாக தோன்றும். இந்த முறை சுவர்களுக்கு மட்டும் அல்ல தரை, மேற்கூரை மற்றும் நீங்கள் பயன்படுத்தும் Sofa, Table, Curtain, Decoratives ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
அறையின் அளவிற்க்கேற்ப நாம் பயன்படுத்தும் பொருட்களை தேர்வு செய்வது அவசியமாகும். பொருட்களை சுவரை ஒட்டி அமையுமாறு வைக்கவேண்டும். இது தங்கள் பயன்படுத்தும் floor area - வை அதிகப்படுத்திக்காட்ட உதவும். இந்த படத்தில் சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப sofa வண்ணம் அமைந்துள்ளது மேலும் தனித்து இருக்கும் காபி டேபிள் தரையின் அளவை குறிக்கிடாத வகையில் தரையின் வண்ணத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. நாம் தேர்வு செய்யும் ஒவ்வொரு பொருளும் வீட்டின் எந்த மூலையிலும் பொருந்த வேண்டும். வீட்டில் ஒவ்வொரு மூளையும் பயன்படுத்த வேண்டும். அறையின் உள் கட்டமைப்பு மற்றும் அலங்காரங்கள் யாவும் நம் தினசரி வாழ்வோடு பயணிக்கும் ஒன்று.

Build a House for Better Life, Design a Home for Best Life…

3 comments:

  1. Je fais partie de ces gens qui vivent dans une grande ville et mon rêve est devenu réalité. Etta m'a aidé à concevoir et décorer ma maison avec toutes les commodités nécessaires à mon goût. Sans leur aide, je n'aurais pas pu aller aussi loin que je suis aujourd'hui.

    ReplyDelete
  2. Unlock the power of precision with our drone survey services in Haryana. Our skilled team specializes in capturing accurate aerial data for various applications, including agriculture, land mapping, and infrastructure development. Using cutting-edge technology, we ensure data precision and deliver valuable insights. Our Haryana-based drone operators are fully compliant with local regulations, prioritizing safety and efficiency. Experience cost-effective and time-saving drone surveys to enhance your projects. Contact us today to discuss your unique needs and harness the benefits of our services in Haryana.

    ReplyDelete