Advertise Here

Breaking News

கட்டுமான தொகையை குறைக்க சில எளிய முறைகள்

அதிகரித்து வரும் மக்கள் தொகையில் ஒருவருக்கு குறைந்தது ஒரு சொந்த வீடாவது இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மிடம் பெருகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. கட்டுமான பொருட்களின் சந்தையில் பெரும்பாலும் உற்பத்தி தொகையை விட விற்பனை தொகை பல மடங்கு கூடுதலாக உள்ளது. இந்நிலையில் பொருளை வண்டியில் ஏற்றி இருக்க மற்றும் பொருட்களை ஏற்றி வரும் வண்டி வாடகை என்று தனி தனியே கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் கட்டுமான பொருட்களின் பற்றாக்குறை , வேண்டிய நேரத்தில் பொருள் வந்து சேருவதில் இருக்கும் சிக்கல்கள் என சொல்லிக்கொன்டே போகலாம்.

cost control in construction


கட்டுமான தொகையை குறைக்க இந்த எளிய முறைகளே போதுமானது.

நாம் எந்த  இடத்தில கட்டிடம் காட்டுகிறோமோ அதிலிருந்து 20 முதல் 30 கிமீ  தொலைவில் கிடைக்கும் கட்டுமான பொருட்களை தேர்வு செய்தால் 10% வரை வீண் செலவுகளை குறைக்க முடியும். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை கொண்டு நாம் பயன்படுத்தி வந்த அத்துணை கட்டுமான பொருட்களுக்கும் மாற்று பொருட்கள் சந்தையில் உள்ளது. செங்கல் கற்களுக்கு பதிலாக concrete blocks, fly ash பிரிக்ஸ், prefabricated walls etc... ஆகியவற்றை  உபயோகிக்கலாம். இந்த வார்த்தைகளை நாம் அதிகமாகவே கேட்டிருப்போம் ஆனால் இவற்றை எப்படி நம்புவது என்ற குழப்பத்திலேயே பெரும்பாலும் அதிக விலை கொடுத்து கட்டுமான பொருட்களை வாங்குவது வழக்கமாகவே உள்ளது.

Flyash கற்கள் மூலம் 15% கட்டுமான தொகையை குறைக்கலாம். செங்கல் கற்களில் இருக்கும் அத்துணை தன்மையும் இதில் உள்ளது. மேலும் சுவற்றில் மழை காலங்களில் ஈரம் தாங்கும் flyash கற்கள் ஈரத்தை சுவற்றில் தங்க செய்யாது தவிர்க்கும். Pre-Fabricated Walls ஆலைகளில் நாம் பயன்பாட்டிற்கு ஏற்ப நம் கேட்கும் அளவில் Concrete கொண்டு செய்யப்படும். அவற்றை கொண்டுவந்து நிலத்தில் அறைகளின் வடிவத்திற்கு ஏற்ப பொருத்தப்படும். இதன் மூலம் கட்டிடம் கட்டுவதற்கு ஆகும் அதிகபட்ச நாட்களின் அளவு குறையும். குறைந்தது ஒரு கட்டிடம் கட்ட 6 மாத காலம் எடுக்கும் ஆனால்  Pre - Fabricated Walls முறைப்படி இரண்டு முதல் மூன்று மாதமே போதுமானது. மரத்தால் ஆனா கதவு மற்றும் ஜன்னல் மட்டுமே பார்த்து பழகிருப்போம் தற்போது UPVC (unplasticized polyvinyl chloride) என்ற பொருளால் ஆனா ஜன்னல்கள் அதன் குறைந்த விலையாலும்  அழகாலும் மக்களிடம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மாற்று கட்டுமான பொருட்களின் பயன்பாடு அதிகரித்தல் அவற்றின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

No comments